அதிர்ச்சி!! சென்னையில் இளம் பெண் பானி பூரி சாப்பிட்டதும் மயங்கி விழுந்து மரணம்!!
Apr 3, 2023, 08:48 IST

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை அதிகம் விரும்புகின்றனர். துரித உணவுகளால் சமீப காலமாக இளைஞர்கள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஷவர்மா சாப்பிட்டு சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் பானி பூரி சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோனிஷா என்ற 24 வயது இளம்பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து, பறக்கும் ரயிலை பிடிக்க படிக்கட்டுகளில் வேகமாக ஏறிச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு ரயில் நிலையத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் திடீரென சரிந்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதை தொடர்ந்து, அவரது தோழிகள் மோனிஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட பிறகே முழு தகவல் தெரிய வரும் என்றும் கூறுகின்றனர். இது போன்ற எதிர்பார்த்த உயிரிழப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.