Movie prime

அதிர்ச்சி!! நகரும் நடைபாதையில் சிக்கி காலை இழந்த இளம் பெண்!!

 
airport accident
சர்வதேச அளவில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று தாய்லாந்து. பல்வேறு நாடுகளில் இருந்து பல சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் விமான நிலையத்தின் நடைபாதையில் சிக்கி ஒரு இளம் பெண் காலை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
don mueang airport
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் உள்ள டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் நகரும் நடைபாதையில்  சிக்கி இளம்பெண் ஒருவர் இடது காலை இழந்துள்ளார். டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அந்த பெண், தனது சூட்கேஸ்களுடன் ட்ராலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பெண் எதிர்பாராமல் சூட்கேஸ் மீது தவறி விழுந்ததில் அவரது கால் நகரும் நடைபாதையில் சிக்கி உள்ளது. உடனே கதறி துடித்த அந்த பெண்ணை பார்த்து விரைந்து வந்த விமான நிலைய மருத்துவ ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
don mueang airport
மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது இடது களின் பாதி பகுதி நீக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அவரது மகன் கூறியுள்ளார். அவரது மருத்துவ செலவு மற்றும் இழப்பீடை விமான நிலையம் ஏற்றுக்கொள்ளும் என்று டான் முயாங் சர்வதேச விமான நிலைய இயக்குநர் கருண் தனகுல்ஜீரபட் கூறியுள்ளார்.