Movie prime

அதிர்ச்சி!! ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!!

 
kayalvizhi
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு தடுப்பு நடைமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கொரோனா பரிசோதனை அதிகரிப்பு, தியேட்டர்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
kayalvizhi
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,099 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதாகவும், 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
hospital
இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே என்ன காய்ச்சல் என்பது தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.