Movie prime

அதிர்ச்சி!! மீண்டும் ஒரு காவலர் தூக்கிட்டு தற்கொலை!!

 
thokku
கோவை டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், சென்னையில் மீண்டும் ஒரு காவலர் தற்கொலை செய்துள்ளார். அருண் குமார் என்பவர் சென்னை மாநகர காவல் துறையில், குதிரைப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் கல்லூரி நாட்களில் இருந்தே காதலித்து வந்த முத்து பிரியா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
suicide
முத்து பிரியா, திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அருண் குமார் சென்னையில் பணியாற்றுவதால் தன்னுடன் வேலை செய்யும் புஷ்பராஜ் என்பவருடன் சென்னை அயனாவரத்தில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணி அளவில் புஷ்பராஜ் வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அருண்குமார் சீருடை அணிந்தபடி மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அயனாவரம் காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அருண்குமாரின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
tn police death
அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, வெளியூரில் பணி புரியும் அவரது மனைவியை காண அவருக்கு விடுப்பு கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. கோவை டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், மீண்டும் ஒரு காவலர் தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.