Movie prime

அதிர்ச்சி!! பள்ளி வாகனத்தின் மீது ஆட்டோ மோதி பயங்கர விபத்து!! 5 பேர் பலி!!

 
death
கேரள மாநிலம் மொக்ரால் பகுதியில் வசித்து வருபவர்  உமாலிமா. இவரது சகோதரிகள் பாத்திமா மோகர்,  நபீசா. இவர்கள்  மூவரும் தங்களது சித்தியுடன் உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோ ஓட்டுனர் அப்துல் ரவூப். தனியார் பள்ளி பேருந்து ஒன்று மாணவர்களை இறக்கி விட்டு காலியாக வந்து கொண்டிருந்தது.
accident
பல்லத்தட்கா என்ற பகுதியில் எதிர்பாராத விதமாக பள்ளி பேருந்தும் - ஆட்டோவும் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில்  ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் அப்துல் ரவூப், உமாலிமா, பாத்திமா மோகர், நபீசா 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  
hospital
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.