Movie prime

அதிர்ச்சி!! பேட்மிண்டன் விளையாடியவர் சுருண்டு விழுந்து மரணம்!!

 
suicide
இன்றைய வாழ்க்கை முறையில் யாருக்கும் எப்போதும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்பாராத வேலையில், எதிர்பாராத சூழலில் மரணம் நிகழ்வது அதிகரித்து வருகிறது. விளையாடும் போது, திருமண விழாவில், உடற்பயிற்சி செய்யும் போது என்று பல எதிர்பாராத சூழலில் மரணம் ஏற்படுகிறது.
badminton
அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிய நபர் திடீரென சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மல்காஜ்கிரியை சேர்ந்தவர் ஷியாம் யாதவ். 38 வயதாகும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். இந்நிலையில், இவர் தினந்தோறும் தனது அலுவலக பணியை முடித்த பிறகு பேட்மின்டன் விளையாடுவது வழக்கம்.
hospital
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர் வழக்கம்போல் செகந்திராபாத் லாலாப்பேட்டையில்  உள்ள ஒரு உள்விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் பேட்மின்டன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, எதிர்ப்பாராத விதமாக ஷியாம்யாதவ் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.