Movie prime

அதிர்ச்சி!! சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு!! 11 பேர் பலி!!

 
bomb blast
சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஸ்டர் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளை பிடிப்பதற்காக ரோந்து சென்ற 10 காவல்துறையினர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
chattisgarh
சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஸ்டர் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்டுகளை காவல்துறையினர் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 10 காவல்துறையினர் உள்ளிட்ட 11 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
chattisgarh
இந்நிலையில், உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்தினருக்கு சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல் கூறியதோடு இந்த சம்பவத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு குண்டு வெடிப்பில் சிக்கி 10 காவல்துறையினர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.