Movie prime

அதிர்ச்சி!! ரசாயனத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பெரும் விபத்து!!

 
blasting
கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் ரசாயன தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் நேற்று ஒரு தனியார் தொழிற்சாலையில் பாய்லர் பராமரிப்பு பணி நடைபெற்று இரவு சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது.
cuddalore sipcot
இதனால் குழாயில் இருந்து ரசாயன புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த விபத்து காரணமாக எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று தொழிற்சாலை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பொதுமக்கள் கடும்  துர்நாற்றத்துடன்  கண் எரிச்சல் மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டதாக சொல்லி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
cuddalore sipcot
உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து  பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.