அதிர்ச்சி!! ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் குண்டுவெடிப்பு!!
Apr 15, 2023, 10:34 IST

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று காலை மேற்கு ஜப்பான் பகுதியில் உள்ள வகயாமாவில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென அங்கு குண்டு வீசியதில் அது வெடித்து புகை கிளம்பியது. பிரதமர் கிஷிடாவை பாதுகாவலர்கள் உடனடியாக சூழ்ந்து கொண்டு அங்கிருந்து அவரை காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நபரை சம்பவ இடத்திலேயே பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், இதுவரை கைது நடவடிக்கை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிஷிடா பாதுகாப்பாக உள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டுக்குள் ஜப்பான் பிரதமர் குறிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.