Movie prime

அதிர்ச்சி!! மதுரை அருகே கார்- கண்டெய்னர் லாரி மோதி பயங்கர விபத்து!! 4 பேர் பலி!!

 
accident
மதுரை திருமங்கலம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சூழலில் பல்வேறு விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
car accident
அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில்  கார் ஒன்று ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, மையிட்டான்பட்டி விலக்கு என்ற இடத்திற்கு அருகே கார் சென்ற போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
death
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.