Movie prime

அதிர்ச்சி!! பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து!! 6 பேர் பலி!!

 
accident
அரசு பேருந்து மீது நேருக்கு நேர் வந்த கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் உடல் நசுங்கி பலியாகி உள்ளனர். பெங்களூரில் சந்தாபுரா பகுதியில் வசித்து வரும் சில குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து காரில் சாமராஜநகரில் உள்ள மலே மகாதேஸ்வரா கோவிலுக்கு சென்ற அனைவரும் சாமி  தரிசனம் முடித்துவிட்டு அனைவரும் தங்களது காரில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களது கார் சாத்தனூர் நகர் அருகே கெம்மலே கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
car accident
இந்த கொடூர விபத்தில் காரில் பயணம் செய்த 6  பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து மோதியதை அடுத்து கார் நொறுங்கியது. உயிரிழந்த 6 பேரில், நாகேஷ், புட்டராஜு, ஜோதிர்லிங்கப்பா, கோவிந்தா, குமார் என்று 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
death
காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கான அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயம் அடைந்த பேருந்து ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன்  பேருந்து பயணிகள் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.