Movie prime

அதிர்ச்சி!! செவிலியர்களின் அலட்சியத்தால் கையை இழந்த குழந்தை!!

 
rajiv gandhi hospital
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் கையை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஸ்தகீர் - அஜிஸா என்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
baby right hand
அந்த குழந்தைக்கு இரத்த கசிவு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 தினங்களாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டுள்ளது. அதனால் குழந்தையின் வலது கையின் நிறம் மாறி உள்ளதை கவனித்த குழந்தையின் தாய் செவிலியரிடம் கூறியுள்ளார்.
baby right hand
ஆனால், செவிலியர்கள் அலட்சியத்துடன் நடந்து கொண்டதால், குழந்தையின் கை அழுகியுள்ளது. குழந்தையின் தாயார், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப்போக்கு காரணமாக  தனது குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளதாக குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.