Movie prime

அதிர்ச்சி!! குளத்தில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவி பலி!!

 
water death
திருச்சி மாவட்டம், வையம்பட்டி கடப்பமரத்துப்பட்டியில் வசித்து வருபவர்   மலைச்சாமி. இவரது மகள் விஸ்வஜோதி (12). இவர் என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கோகுலாஷ்டமி பள்ளி விடுமுறை என்பதால் குளத்தில் போய் குளித்து வரலாம் என அவரது வயதை ஒத்த சிறுமிகள் முடிவு செய்தனர். அதன்படி  அதே பகுதியில் உள்ள முத்தாலம்மன் குளத்தில்  விஸ்வஜோதி, அவரது சகோதரி மகரஜோதி மற்றும் தேவதர்ஷினி, ரவி பிரகாஷ் 4 பேரும் குளிக்க சென்றனர்.
lake
அனைவரும் குளத்தில் இறங்கி உற்சாகமாக விளையாடிக் கொண்டே குளித்துக்  கொண்டிருந்தனர். அப்போது விஸ்வஜோதி, தேவதர்ஷினி, ரவி பிரகாஷ் மூவரும்   குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கத் தொடங்கினர். அப்போது, அதே பகுதியில் வசித்துவரும் சிறுவன் சபரீஸ்வரன்  குளத்துக்குள் இறங்கிச் சென்று தேவதர்ஷினி, மகர ஜோதி, ரவி பிரகாஷ் மூவரையும்   குளத்தில் இறங்கி வெளியே இழுத்து வந்து காப்பாற்றினார்.

ஆனால் சிறுமி விஸ்வஜோதி அதற்குள் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கத் தொடங்கினார். அதற்குள் சிறுமிகளின் கூச்சல் கேட்டு   அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குளத்தில் மூழ்கிய விஸ்வஜோதியை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
death
மாணவி உயிரிழந்த சோகம் ஒரு புறம். மற்றொரு புறம்  அதே வயதை ஒத்த சிறுவன் சபரீஸ்வரன் 3 பேரை உயிருடன் மீட்டுள்ளான். இவர் அதே பகுதியில் 8ம் வகுப்பு மாணவன் .சரியான சமயத்தில் சமயோசிதமாக செயல்பட்டு சிறுமிகளை காப்பாற்ற தவறியிருந்தால் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்கின்றனர். கிராம  மக்கள். இவரது செயலுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.