Movie prime

அதிர்ச்சி!! கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

 
suicide
கோவை சரக டிஐஜி விஜயகுமார் கேம்ப் ஆபிஸில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை 6:45 மணி அளவில் கோயம்புத்தூர் சரக டிஐஜியாக இருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
DIG Vijaykumar
தேனி மாவட்டத்தை சேர்ந்த எளிய குடும்ப பின்னணியை கொண்டவர் டிஐஜி விஜயகுமார். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு எழுதி டி.எஸ்.பியாக பணி அமர்ந்தார். அதன் பின்னர், மீண்டும் யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ் பதவி பெற்றார். இவர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார்.

மேலும், இவர் சிபிசிஐடி எஸ்.பியாக பணியாற்றிய போது டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
suicide
இந்நிலையில், இவர் பணி சுமை காரணமாக தற்கொலை செய்தாரா அல்லது சொந்த காரணங்களால் தற்கொலை செய்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.