Movie prime

அதிர்ச்சி!! ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை!!

 
train suicide
சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் 2 ஆம் ஆண்டு மாணவி ஹேமிதா குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் தேர்வில் பாலமுருகன் - விமலா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
train
இவர்களுடைய மூத்த மகள் ஹேமிதா ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஹேமிதா அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு டியூஷன் சென்டரில் சிறு வயது முதல் படித்து வந்த நிலையில், டியூஷன் மாஸ்டர் அஜயுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் ஹேமிதாவின் வீட்டிற்கு தெரியவர படிக்கும் வயதில் காதல் எதற்கு என்று கண்டித்த பிறகு ஒரு சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டனர்.  

பள்ளி முடிந்து பின்னர், கல்லூரியில் சேர்ந்த பிறகு ஹேமிதா மற்றும் டியூஷன் மாஸ்டர் அஜய் இருவரும் மீண்டும் நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துள்ளார். இதற்கு ஹேமிதா வீட்டில் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூலை 27 ஆம் தேதி ஹேமிதா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
death
இது குறித்து வழக்குப்பதிவு செய்த அப்பகுதி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே இளம் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சமத்துவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.