Movie prime

அதிர்ச்சி!! 10 ஆவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!!

 
suicide
சென்னையை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி நித்யஸ்ரீ(22), உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினர் சிறிய பிரச்சனைகளை கூட சமாளிக்க முடியாமல் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிலும், கொரோனா காலத்திற்கு பிறகு அனைவரும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
neet
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மன அழுத்தம் அதிகரிப்பால் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது மருத்துவ கல்லூரி மாணவி நித்யஸ்ரீ 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ராம சுப்பு(64) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் 2 ஆவது மகள் நித்யஸ்ரீ சென்னையில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
girl jumping
தற்போது, செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், தேர்வை சரியாக எழுதாத காரணத்தால் தோல்வி பயம் ஏற்பட்டு, மிகவும் உருக்கமாக பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு குடியிருப்பின் 10 ஆவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அதில், அவரது உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.