Movie prime

அதிர்ச்சி!! கல்லூரி மாணவனின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்பு!!

 
death
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காட்டரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சய். இவர், பல்லாவரம்  தனியார் கலைக் கல்லுாரில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது ஊரிலேயே இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். வேறு ஜாதியை சார்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாணவர் சஞ்சய் மன உளைச்சலில் இருந்து வந்தார்.  
sanjay
 இந்த மன அழுத்தத்தில் சஞ்சய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த   தற்கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் இளைஞரின் பெற்றோர், உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர். மாணவர் சஞ்சயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்து, நேற்று உடலை  மயானத்தில் எரியூட்டி தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
thokku
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாதி எரிந்த நிலையில் சஞ்சயின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாதி எரிந்த நிலையில் இருந்த மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.