Movie prime

அதிர்ச்சி!! மாடு முட்டி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு!!

 
cow
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பார்த்தசாரதி கோவில் அருகே மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தெருவில் திரியும் மாடுகள் மனிதர்களை தாக்கும் நிகழ்வு அடிக்கடி நடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
cow attack
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி சிறுமியை தேர்வில் சென்ற மாடு ஒன்று முட்டி சம்பவ இடத்திலேயே கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பார்த்தசாரதி கோவில் அருகே 74 வயது சுந்தரம் என்ற முதியவர் சென்று கொண்டிருந்தார்.
cow
அப்போது, எதிர்பாராத விதமாக சாலையில் செந்தூர் கொண்டிருந்த மாடு ஒன்று அவரை கடுமையாக முட்டி தாக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.