Movie prime

அதிர்ச்சி!! ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் உடலநலக்குறைவு!! மருத்துவமனையில் அனுமதி!!

 
evks elangovan

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அதை தொடர்ந்து, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருமகனின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். தி.மு.க ஆதரவுடன் தேர்தலில் களமிறங்கிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை விட 66,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
elangovan
அதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். தற்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது.
hospital
இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது உடல் நலத்துடன் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவலளித்துள்ளது. மேலும் 6 ஆவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மீண்டும் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வர உள்ளதாகவும், அவர்கள் வந்த பிறகு அவர் உடல் நலம் குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.