அதிர்ச்சி!! பிரபல நடிகர் கல்லீரல் பாதிப்பால் மரணம்!! பிரபலங்கள் இரங்கல்!!
Aug 4, 2023, 08:45 IST

மலையாள திரையுலகின் பிரபல நடிகர் கைலாஷ் நாத், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார். தமிழில், டி.ராஜேந்தரின் ’ஒரு தலை ராகம்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கைலாஷ் நாத்.1980களில் வெளியான ‘ஒரு தலை ராகம்’ திரைப்படம் கடந்த தலைமுறை ரசிகர்களால் கிளாசிக்கல் படமாக இன்றளவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் இயக்குனர் அஷ்டவதானி டி.ராஜேந்தருக்கு அப்பால் திரைப்படத்தில் நடித்த பல்வேறு நடிகர்களுக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு.

ஒரு தலை ராகம் திரைப்படத்தில், ‘தம்பு’ என்ற கல்லூரி மாணவன் வேடத்தில் கைலாஷ் நாத் நடித்திருப்பார். தமிழில் அதன் பிறகும் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும், மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் கைலாஷ் நடித்துள்ளார். கேரளாவில் பிறந்த கைலாஷ் நாத், மாணவப் பருவத்தில் மிமிக்ரி செய்வதில் திறமையானவராக விளங்கினால். நாடகங்களில் நடிப்பதில் அவர் காட்டிய ஆர்வமே, திரையுலகில் நுழைவதற்கான பயிற்சியாக அவரைத் தயார் செய்தது.

மலையாளத்தில் 1977 ல் வெளியான ’விடருன்னா மோட்டுகள்’ திரைப்படம் மூலமாக அறிமுகமான கைலாஷ், தொடர்ந்து ‘யுகபுருஷன்’, ’ஏதோ ஒரு ஸ்வப்னம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கேரள ரசிகர்களிடையே பிரபல நடிகராக வலம் வந்தார். அதன் பின்னர் சின்னத்திரையிலும் தொடர்ந்து பங்களித்து வந்தார். 65 வயதான நடிகர் கைலாஷ் நாத், கல்லீரல் பாதிப்பின் காரணமாக கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை திடீரென மரணமடைந்தார்.