Movie prime

அதிர்ச்சி!! 3 மணி நேரம் வெடித்த பட்டாசு!! 11 உயிர்கள் பலியான சோகம்!!

 
blasting
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ariyalur
இந்நிலையில், அரியலூர் மாவட்டம், கீழப்பலூர் அருகே வெற்றியூர் ஊராட்சியில் உள்ள விரகாலூர் கிராமத்தில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் பட்டாசு ஆலை மற்றும் குடோன் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் விற்பனைக்காக ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்க சிவகாசி அருகே உள்ள சாத்தூரில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.

இந்நிலையில், நேற்று காலை 9.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்ப தயாராக இருந்த பட்டாசுகள் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உடல் சிதறி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
death
மேலும், இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில், அதில் 5 பேர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து, கீழப்பழுவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.