Movie prime

அதிர்ச்சி!! சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு!! 10 பேர் உயிரிழப்பு!!

 
lhonak lake
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களில் பருவமழை பெய்து வருகிறது. அதிலும், வட இந்திய மாநிலங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.
lhonak lake
இதனால், ஹிமாச்சல் பிரதேஷ், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அந்த மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
lhonak lake
அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் உள்ள தெற்கு லோனாக் ஏறி திடீரென உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர், 82 நபர்களை காணவில்லை. இதில் காணாமல் போன 82 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய 22 ராணுவ வீரர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.