Movie prime

அதிர்ச்சி!! உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளத்தில் பரவிய காட்டுத்தீ!! 36 பேர் பலி!!

 
hawaii wildfire
ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவுகள் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம்.
hawaii
அதுவும் கோடை காலங்களில் இங்கு பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்நிலையில், அங்கு எதிர்பாராத விதமாக காட்டுத்தீ பரவி உள்ளது. காட்டுத்தீ ஏற்பட்ட போது சூறாவளி காற்றும் சேர்ந்து வீசியதால், காட்டுத்தீ வேகமாக பரவி உள்ளது.
hawaii wild fire
இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் இந்த காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.