அதிர்ச்சி!! திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வேணு காலமானார்!!
Updated: Oct 21, 2023, 09:41 IST

திருவள்ளூர் மாவட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வேணு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ள செய்தி திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று அக்டோபர் 21 ஆம் தேதி அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அவரது சொந்த ஊரான கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ள பனப்பாக்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக தொண்டர்கள் வேணுவை கும்மிடிப்பூண்டியார் என்றே அழைத்தனர். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 'கலைஞர் விருது' பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நேரடி அரசியலில் இருந்து விலகி இருந்த நிலையில், இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.