Movie prime

அதிர்ச்சி!! அரசு ஏசி பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து!! 7 பேர் பலி!!

 
bus accident
இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதிலும், கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. எப்போது, யாருக்கு, என்ன நடக்கும் என்று தெரியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
sagar canal
அந்த வகையில், ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சாகர் கால்வாயின் அருகில் உள்ள சாலையில் அரசு ஏசி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
suicide
அப்போது, எதிரில் வந்த வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் முயன்ற போது, எதிர்பாராத நேரத்தில் பேருந்து சாகர் கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பெயர்ந்து 30 அடி ஆழத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.