Movie prime

அதிர்ச்சி!! திருமணத்தில் அலறிய DJ இசை காரணமாக மணமகன் உயிரிழப்பு!!

 
dj music death
இன்றைய வாழ்க்கை முறையில் யாருக்கும் எப்போதும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்பாராத வேலையில், எதிர்பாராத சூழலில் மரணம் நிகழ்வது அதிகரித்து வருகிறது. விளையாடும் போது, திருமண விழாவில், உடற்பயிற்சி செய்யும் போது என்று பல எதிர்பாராத சூழலில் மரணம் ஏற்படுகிறது.
dj music
அதே போல, தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமர்ஹி மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்வில், DJ இசை சத்தத்தை கேட்டு மயங்கி விழுந்த மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சுரேந்திர குமார் என்ற 22 வயது இளைஞருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்வில் DJ இசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்தின் போது DJ இசையின் சத்தம் சற்று அதிகமாக இசைந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக, மணமகன் சுரேந்திர குமார் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்துள்ளார்.
suicide
மயங்கி விழுந்த மணமகனை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், அவர் தலை சுற்றி, நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.