Movie prime

அதிர்ச்சி!! கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலி!!

 
suicide
டெல்லி, ஹரியானா, இமாச்சல், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சில இடங்களில் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.
rain
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் டோக்ரா ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு ராணுவ வீரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஹிமாச்சலில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு இடி விழுந்து 6 வயது சிறுமி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ராஜஸ்தானில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும், தோடா மாவட்டத்தில் தாத்ரி-ன்டோ சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில் இருந்து ரிஷிகேஷ் சென்று கொண்டிருந்த வாகனம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு பேருந்து மீது விழுந்ததில் பேருந்து கங்கா ஆற்றில் விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
landslide
இந்நிலையில், உத்தரபிரதேஷில் மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இருவர் பலியாகி உள்ளனர். இவ்வாறு வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 19 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.