Movie prime

அதிர்ச்சி!! 68 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியான இன்ஸ்டாகிராம் பிரபலம்!!

 
remi lucidy
சாகசம் செய்ய நினைத்து இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் 68 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி என்ற 30 வயது இளைஞர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர்.
remi lucidy
ரெமி லூசிடி உயரமான கட்டிடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளர். மேலும், அவர் அதை புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். அந்த வகையில், கடந்த வாரம், இவர் ஹாங்காங்கில் டிரெகன்டர் டவர் என்ற மிக உயரமான கட்டிடத்தில் ஏறி படம் எடுக்க சென்றுள்ளார்.
remi lucidy
அதற்காக அவர் 68 ஆவது மாடிக்கு லிப்டில் ஏறி சென்று அங்கு சில ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியாகி உள்ளார். இது குறித்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவரின் கேமரா மற்றும் பாஸ்போர்ட் கிடைத்துள்ளது. அதை கொண்டு அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது.