Movie prime

அதிர்ச்சி!! பிரேசிலில் ஏற்பட்ட நிலச்சரிவு!! 36 பேர் பலி!!

 
brazil landslide
பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் பலியாகி உள்ளனர் என்றும் 40 பேர் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
brazil landslide
இந்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சா செபாஸ்டியன் நகரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி பிரேசில் நாட்டின் பாரம்பரிய பண்டிகையான கார்னிவல் பண்டிகை நடைபெறும். இந்த ஆண்டு கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடற்கரை நகரமான சா செபாஸ்டியன் நகரத்தில் இந்த கார்னிவல் பண்டிகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் 24 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும், 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 40 பேர் காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
brazil flood
இந்த பயங்கர நிலச்சரிவால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடின்றி தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மட்டுமின்றி உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.