Movie prime

அதிர்ச்சி!! பருவநிலை மாற்ற பாதிப்புகளில் 5,000 பேர் பலி!!

 
tsunami
கடந்த ஆண்டில் ஆசியாவில் 80 பேரிடர்களும் அதனால் 5,000 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மேலும், இந்த பேரிடர்களால் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். உலக வானிலை அமைப்பு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பேரிடர்கள், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போன்றவை தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
disaster
அந்த அறிக்கையின் படி, பருவநிலை மாற்றம் அதிவேகமாக நடைபெறும் கண்டமாக ஆசியா குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வானிலை, பருவநிலை மற்றும் தண்ணீர் தொடர்பாக மொத்தம் 81 பேரிடர்கள் மட்டும் ஏற்பட்டுள்ளன. இந்த பேரிடர்களில் 83 சதவீதம் வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்டவை. இதனால் 5,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
earthquake
மேலும், நீண்ட கால வறட்சியால் சீனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் அதிக வெப்பம் மற்றும் வறட்சியான சூழலால் ஆசியாவில் உள்ள பனிப்பாறைகள் முன்பை விட அதிக வேகமாக உருகியுள்ளன. இதனால் அடுத்து வரும் ஆண்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.