Movie prime

அதிர்ச்சி!! பத்ம பூஷன் விருது பெற்ற பிரபலம் காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
c r rao
இந்தியாவின் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற புள்ளியியல் வல்லுநராகவும், கணிதவியலாளருமாக இருந்தவர்  ராதாகிருஷ்ண ராவ் . இவர் வயது மூப்பு மற்றும் உடல் நல குறைபாடு காரணமாக காலமானார். அவருக்கு வயது 102. கர்நாடகாவின் பழைய மைசூர் மாகாணத்தில் உள்ள ஹாடகாலியில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் சி.ஆர்.ராவ். ஆந்திராவின் குடூர், நந்திகாமா, விசாகப்பட்டினத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். ராவ் 1943ல் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் எம்எஸ்சி பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் எம்எஸ்சி பட்டமும் பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.  
c r rao
ராவ் முதலில் கேம்பிரிட்ஜில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனம் மற்றும் மானுடவியல் அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பஃபலோ பல்கலைக்கழகத்தில் ஆய்வு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இதனைத்  தொடர்ந்து புள்ளியியல் துறையில் பல்வேறு சேவைகளை  செய்து வந்தார்.

தொடர்ந்து 75 ஆண்டுகளாக புள்ளியியல் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்து வந்தார். இவர்  கணிதத்தில் ஆற்றிய சேவைகளுக்காக புள்ளியியல் துறையில் உயரிய விருதைப் பெற்றார். இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. புள்ளியியல் துறையை மேம்படுத்த பல பயிற்சித் திட்டங்களை சி.ஆர்.ராவ் உருவாக்கினார். தென்கிழக்காசியாவில் புள்ளியியல் துறை வளர அவரது முயற்சிகள் உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகாது.  
rip
ஐ.நா.சபையின் புள்ளியியல் துறை குழுவின் தலைவராக ராவ் இருந்த போது, ஆசிய அளவில் புள்ளியியல் கல்வி மையம் தொடங்க வலியுறுத்தினார். அதன் விளைவாக, ஆசிய பசிபிக் புள்ளியியல் கல்வி நிறுவனம்  டோக்கியோவில் 1970ல் தோற்றுவிக்கப்பட்டது. இதில், இந்தியா உள்பட  20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவுக்கு பல தலைவர்கள் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.