Movie prime

அதிர்ச்சி!! பரோட்டா சால்னாவில் பூரான்!! அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்!!

 
parotta salna
ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் களமிறங்கிவிட்ட இக்காலத்தில் வீடுகளில் சமைப்பதே பெரும் சவாலாகி வருகிறது. இதனால் உணவகங்கள், மெஸ்களில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தோ நேரில் சென்றோ சாப்பிட்டு விடுகின்றனர். பல நேரங்களில் வெளி உணவு ஆரோக்கியத்திற்கு கேள்விக்குறியாகி வருகிறது இதையடுத்து தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து உணவு கடைகள் தினமும்  திறக்கப்பட்டு அதில் விதவிதமான உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றன.  
parotta salna
மக்களை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு உணவு வகைகளை குக்கிராமங்களில் சமைத்து அசத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு கெட்டுப்போன உணவுகளை அழித்தும் கடைகளுக்கு சீல் வைத்தும் வருகின்றனர். இருந்த போதும், உணவில் கலப்படம், நச்சுத்தன்மைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், கீழப்பெரும்பள்ளம்  கிராமத்தில் வசித்து வருபவர் பிச்சை. இவர்  பூம்புகார் அருகே உள்ள தர்மகுளம் கடைவீதியில் "ஸ்டார் சி உணவகம்" என்ற புகழ்பெற்ற உணவகத்தில் நேற்று இரவு வீட்டுக்கு பார்சல் மூலம் உணவு வாங்கி வந்தார். அந்த உணவை தங்களது குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
parotta salna
அப்போது கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று தென்பட்டுள்ளது. அதை கையில் எடுத்து பார்த்த போது மிகப்பெரிய சடை பூரான் இருந்ததாக தெரிகிறது.  இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக உணவகத்திற்கு சென்று கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து உரிய பதில் அளிக்கவும், மன்னிப்பு கோரவும் ஹோட்டல் நிர்வாகம் தயாராக இல்லை. உடனடியாக இதனை அடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கப்பட்டதன் பேரில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.