Movie prime

அதிர்ச்சி!! 6 மாத குழந்தையை கடித்து குதறிய எலிகள்!!

 
rat and child
அமெரிக்காவில் இந்தியானா மாகாணத்தில் வசித்து வருபவர் டேவிட். இவரது மனைவி ஏஞ்சல் சோனாபம். இவர்களின் மகள் 6 மாத கைக்குழந்தை. இந்த குழந்தையை எலிகள் 50 இடங்களில் கடித்து குதறி விட்டன. இதையடுத்து குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
rat biten child
காயமடைந்த 6 மாத பச்சிளம் குழந்தை உட்பட இந்த தம்பதிக்கு மொத்தம் 3 குழந்தைகள். செப்டம்பர் 13ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் போது டேவிட் தன்னுடைய குழந்தையை எலிகள் கடித்து விட்டதாக தெரிவித்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கை கால் விரல்கள் என கிட்டத்தட்ட குழந்தையின் உடலில் 50 இடங்களில் எலி கடித்து குதறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
rat biten child
அத்துடன் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டை சுற்றி பார்த்த போது குப்பை மற்றும் எலி கழிவுகள் நிறைந்து இருப்பதை போலீசார் கண்டுள்ளனர். குழந்தையை பாதுகாப்பாக வளர்க்காமல் அலட்சியமாக இருந்ததால் பெற்றோர் மற்றும் குழந்தையின் அத்தை ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல் கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.