Movie prime

அதிர்ச்சி!! ரேஷன் அட்டையில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு!!

 
ration shop
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய்  போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மாதத் தொடக்கத்தில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை வழங்கப்படும். மாத இறுதியில் மண்ணெண்ணெய் வழங்கப்படும்.
ration_shop
இந்நிலையில், மத்திய அரசு மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்துள்ளது. அதனால், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மொத்த மண்ணெண்ணெய் தேவையில் 7 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரேசன் அட்டை தாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் அளவு குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  ration kerosene
உத்தரப் பிரதேச மாநிலத்தில், 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் இலவச ரேஷன் விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மாதத்தின் தொடக்கத்தில் வருபவர்களுக்கு அரிசி, கோதுமை, தினை போன்ற பொருட்கள் முதலில் வருபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். தாமதமாக வருபவர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ரேஷன் விநியோகம் செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.