Movie prime

அதிர்ச்சி!! ஓடும் ரயில் முன் செல்பி!! உடல் சிதறி இளைஞர் பலி!!

 
train
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம்  அதிகமாக உள்ளது. ஒரு செல்பிக்காக உயிரையே பணயம் வைக்கும் அளவிற்கு சென்றுவிட்டனர் இன்றைய இளைஞர்கள். ஓடும் ரயில் முன்பு செல்பி எடுப்பது, மலை உச்சியில் வழுக்கும் இடத்தில் நின்று செல்பி எடுப்பது, வண்டி ஓட்டும் போது செல்பி எடுப்பது என்று பல ஆபத்தான சூழலில் செல்பி எடுக்க முயலும் போது ஏற்படும் மரணமும் அதிகரித்து வருகிறது.
selfie stick
அந்த வகையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காங்கேயத்தான் (22). பொறியியல் பட்டதாரியான இவர், நேற்று முன்தினம் நண்பர்கள் சபரி, சபரிநாதன், கவுதம் என்பவர்களுடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சேலம்-விருத்தாசலம் ரயில் பாதை அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

இந்த நான்கு பேரும் மது அருந்திய நிலையில் சிறிது நேரத்தில் போதை தலைக்கு ஏறி உள்ளது. இந்நிலையில், அந்த தண்டவாளத்தில் காரைக்காலிருந்து பெங்களூரு நோக்கி செல்லும் ரயில் வந்து கொண்டிருந்தது. இதனால் நான்கு பேரும் தண்டவாளத்தில் இருந்து விலகி உள்ளனர்.
suicide
அதேநேரம் காங்கேயத்தான் ஓடும் ரயில் முன்பாக சென்று செல்ஃபி எடுக்க முயன்று, தண்டவாளத்தின் அருகே சென்று செல்பி எடுத்துள்ளார். அப்போது வேகமாக வந்த ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியதில் அவர் உடல் துண்டாகி காங்கேயத்தான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரியும் படுகாயம் அடைந்துள்ளார். அவர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
hospital
இந்த விபத்து குறித்து சேலம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். செல்பி மோகத்தில் ஓடும் ரயில் முன் சென்று ஒருவர் உயிரிழந்ததும், அவரை காப்பாற்ற சென்ற நண்பர் பயங்கர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.