Movie prime

அதிர்ச்சி!! மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த மாணவி!! முதல்வர் இழப்பீடு!!

 
death
தஞ்சாவூரில் மழை பெய்த போது, மரம் முறிந்து விழுந்து சுஸ்மிதாசென் என்ற மாணவி உயிரிழந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
rain
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பசுபதி கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்த போது இரண்டு மாணவிகள் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது. இதில், சுஷ்மிதா சென் என்ற மாணவி மரணமடைந்துள்ளார். மேலும், ராஜேஸ்வரி என்ற மாணவி தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
M.K.Stalin
இந்நிலையில், உயிரிழந்த மாணவி சுஷ்மிதா சென்னின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ₹5 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு ₹1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.