Movie prime

அதிர்ச்சி!! சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுமோ மோதி பயங்கர விபத்து!! 13 பேர் பலி!!

 
accident
சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுமோ மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கபள்ளாப்பூர் தேசிய நெடுஞ்சாலை 44 யில் சென்று கொண்டிருந்த டாடா சுமோ ஒன்று சாலை ஓரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
accident
இந்நிலையில், எதிரே நின்று கொண்டிருந்த லாரி கடுமையான பனிமூட்டம் காரணமாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. பேகேபல்லியில் இருந்து சிக்கபள்ளாப்பூர் சென்று கொண்டிருந்த டாடா சுமோ விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. மோதிய டாடா சுமோ ஆந்திர மாநில பதிவெண் கொண்டது.
death
இதை தொடர்ந்து, விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிக்கபள்ளாப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.