Movie prime

அதிர்ச்சி!! அரசு பேருந்தில் டெம்போ மோதி பயங்கர விபத்து!! 5 பேர் பலி!! 6 பேர் கவலைக்கிடம்!!

 
accident
ராஜஸ்தான் மாநிலத்தில்  அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து மீது டெம்போ ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 21-ல் நடந்த இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.அரசு பேருந்து மஹ்வாவில் இருந்து ஹிந்தவுன் நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் ஹிண்டானிலிருந்து  டெம்போ எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது.  
hospital
திக்ரி திருப்பம் அருகே வேகமாக திரும்பிய பேருந்து டெம்போ மீது படு வேகமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அந்த பக்கமாக சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இந்த விபத்து குறித்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
death
அங்கு சிகிச்சை பலனின்றி 3 ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.   6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கு பிறகு பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், காவல்துறையினர் பேருந்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து  ஓட்டுநரை தேடி வருகின்றனர்.