Movie prime

அதிர்ச்சி!! பயங்கர விபத்து!! நேருக்கு நேர் மோதி கொண்ட சரக்கு ரயில்கள்!!

 
train accident
மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ரயில் விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. தொடர்ந்து நிகழ்ந்து வரும் ரயில் விபத்துகளால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
train accident
இந்நிலையில், இன்று மேற்கு வங்கம் மாநிலம் பங்குரா பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயில்களின் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.
train
அதன் காரணமாக, கரக்பூர் - பங்குரா - ஆத்ரா வழித்தடத்தில் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து ஏற்பட்டது சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.