அதிர்ச்சி!! அதிகாலையில் பயங்கர விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி!!
Sep 6, 2023, 09:18 IST

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி பகுதியில் உள்ள சின்ன கவுண்டனூர் பைபாஸ் என்ற இடம் உள்ளது.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஆம்னி வேன் ஒன்று 8 நபர்களுடன் சென்று கொண்டிருந்த போது, அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி வேனில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

மேலும், இருவர் சேலம் அரசு மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.