Movie prime

அதிர்ச்சி!! அரசியல் கட்சி மாநாட்டில் பயங்கர குண்டுவெடிப்பு!! 44 பேர் பலி!!

 
bomb blast
பாகிஸ்தானில் 500-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் ஏற்பட்ட திடீர் குண்டுவெடிப்பால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் நடைபெற்ற J.U.I.F என்ற அரசியல் கட்சியின் மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
blasting
அப்போது, திடீரென ஏற்பட்ட குண்டுவெடிப்பால் பொதுமக்கள் கலைந்து தலைதெறிக்க ஓடினர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் J.U.I.F கட்சியின் உள்ளூர் தலைவர் மவுலானா ஜியாஉல்லா உள்ளிட்ட 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், குழந்தைகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
death
இந்நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில் மனித வெடிகுண்டு தாக்குதல் என்பதும், 12 கிலோ வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.