Movie prime

அதிர்ச்சி!! மணமேடையில் மணமகள் திடீர் மரணம்!! நடந்தது என்ன??

 
wedding
இந்த காலத்தில் யாருக்கு எப்போது மாரடைப்பு ஏற்படுகிறது என்பதே தெரியவில்லை. எந்த வயது வித்தியாசமின்றி பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து வயதினருக்கும் திடீர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைவது தற்போது அதிகரித்து வருகிறது.
heart attack
உடற்பயிற்சி செய்யும் போது, திருமண வரவேற்புகளில் நடனம் ஆடும் போது என்று பல இடங்களில் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. தற்போது, அந்த வகையில் மண மேடையில் மணமகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் திருமண சடங்குகளின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட மணப்பெண் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். மணப்பெண் உயிரிழந்த போதும், மணமகனுக்கு மணப்பெண்ணின் தங்கையை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
suicide
திருமணம் நடைபெறும் வரை இறந்த பெண்ணின் உடலை குளிர் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருமணம் நடைபெற்ற பிறகு பெண்ணின் உடலுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை முறைப்படி செய்துள்ளனர். மணமேடையில் மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.