Movie prime

அதிர்ச்சி!! பொது நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர் சுட்டுக்கொலை!!

 
royal docomo
பிலிபைன்ஸ் நாட்டில் உள்ள நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தின் ஆளுநர் ரோயல் டெகாமோ பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
phillipines police
பிலிபைன்ஸ் நாட்டின் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தின் ஆளுநர் ரோயல் டெகாமோ, தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகரில் உள்ள பொது மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய சென்றிருந்தார். அப்போது, அங்கு யாரும் எதிர்பாராத நேரத்தில் ராணுவ உடை அணிந்த சில மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர்.
phillipines police
இந்த சம்பவத்தில், ரோயல் டெகாமோ குண்டுகளால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இதில் சில பொது மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பொது நிகழ்வில் பங்கேற்க வந்த ஆளுநர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.