Movie prime

அதிர்ச்சி!! யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர்!! பலியான மனைவி!!

 
death
இன்றைய வாழ்க்கை சூழலில் பெரும்பாலானவர்கள் யூடியூப் மற்றும் கூகுளை பார்த்து தங்கள் நோய்க்கு தாங்களே மருத்துவம் பார்த்து வருகின்றனர். யூடியூப் பார்த்து அவர்களே அவர்களுக்கு இயற்கை முறையில் பிரசவம் பார்ப்பது அதனால் ஏற்படும் தாய், குழந்தை உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
delivery death
அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அனுமந்தபுரம் கிராமத்தில் வசித்து வரும் மாதேஷ் என்பவருடைய மனைவி லோகநாயகி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் வேளாண்மை பட்டப்படிப்பு படித்து, இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர்கள். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான லோகநாயகி கணவரிடம் வீட்டிலேயே அதுவும் இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்படி, இயற்கை முறையில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது என்பது குறித்து கணவன்-மனைவி இருவரும் யூடியூப் மூலம் பார்த்து வந்துள்ளனர். நேற்று காலை லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, உடனே இருவரும் பேசிக் கொண்டபடி யூடியூப் பார்த்து மாதேஷ் தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். சுகப்பிரசவம் நடைபெற்று லோகநாயகிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
baby
குழந்தை பிறந்த பிறகு அவருக்கு திடீரென இரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. சிறிது நேரத்தில் லோகநாயகி மயங்கியதால், உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் லோகநாயகி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மாதேஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.