Movie prime

அதிர்ச்சி!! மலையில் மோதி நொறுங்கிய விமானம்!! 2 பேர் பலி!!

 
flight accident
மகாராஷ்டிரா மாநிலம் உள்ள கோண்டியா மாவட்டத்தில் உள்ள பிர்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பயிற்சி விமானம் மலையில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் விமான பயிற்சியாளர் மற்றும் பெண் பயிற்சி விமானி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
flight accident
மகாராஷ்டிரா மாநிலம் உள்ள கோண்டியா மாவட்டத்தில் உள்ள பிர்சி விமான நிலையத்தில் இருந்து ஒரு பயிற்சி விமானம் சென்றுள்ளது. இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த விமான பயிற்சியாளர் மோகித் குமார்(25) என்பவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த விரிக்ஷனா மகேஸ்வரி(20) என்ற பெண் பயிச்சி விமானியும் இந்த விமானத்தை இயக்கி உள்ளனர்.

இந்நிலையில், விமானம் ஓடுதளத்தில் இருந்து கிளம்பி சென்ற சில நிமிடங்களில் மத்திய பிரதேசத்தில் உள்ள பாலகாட் மாவட்டம் புக்கோட்டலா என்ற கிராம பகுதியில் உள்ள மலைக்குன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு கிராம மக்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
suicide
மலையில் மோதி நொறுங்கிய விமானம் தீப்பற்றி எரிந்து மேலும் சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் பயிற்சியாளர் மற்றும் பயிற்சி விமானி இருவரும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.