அதிர்ச்சி!! நாட்டையே புரட்டிப் போட்ட சூறாவளி!! வெள்ளத்தில் சிக்கி 26 பேர் பலி!!
Sep 6, 2023, 10:30 IST

பிரேசில் நாட்டில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 நபர்கள் பலியாகியுள்ளதாக அந்த நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டை தாக்கியுள்ள சக்தி வாய்ந்த சூறாவளியால் அந்த நாட்டின் பெரும்பாலான தெற்கு நகரங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வெப்பமண்டல சூறாவளியால் அந்த நாட்டின் தெற்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இந்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மியூகம், வாலேதோ – டக்குவாரி ஆகிய நகரங்களை சுற்றி உள்ள ஆறுகளில் இரு கரைகளை தொட்டு வெள்ளம் பாய்வதால் அந்த நகரங்கள் தனி தீவு போல் காட்சியளிக்கின்றன.

பிரேசில் நாட்டின் முக்கிய சாலைகளில் சுமார் 8 அடி அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டின் கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், ரியோ கிராண்டிட் பகுதியில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் ஏராளமான வீடுகளின் கூரைகள், கதவுகள், வாகனங்கள் சேதமடைந்தன. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 26 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேசில் பேரிடர் மேலாண் துறை அறிவித்துள்ளது.