Movie prime

அதிர்ச்சி!! தடம் புரண்ட ரயில்!! பயங்கர விபத்து!! 30 பேர் பலி!! 150 பேர் படுகாயம்!!

 
train accident
பொதுமக்களின் விருப்பமான மற்றும் பொருளாதார நிலைக்கு சிறந்த பயணமாக அமைவது ரயில் பயணம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள ராவல்பிண்டிக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.
train accident
இந்த ரயிலில் 10 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டுள்ளது. இந்த பயங்கர விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
hospital
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் பலியாகி உள்ளனர். தடம் புரண்ட ரயிலில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.