அதிர்ச்சி!! சாலையில் திடீரென தீப்பிடித்து எறிந்த வேன்!! 7 பேர் உடல் கருகி பலி!!
Oct 15, 2023, 09:34 IST

மத்திய ஐரோப்பாவில் உள்ள நாடான ஜெர்மனியில் முனீச் நகரின் கிழக்கு பகுதியில் முஹல்டோர்ப் என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று காலை வேன் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள போலீஸ் சோதனை சாவடியில் இருந்த காவல்துறையினர் வேனை சோதனைக்காக நிறுத்தும்படி கூறினார்.

ஆனால் ஓட்டுநர் வேனை நிறுத்தாமல் காவல்துறை சோதனை சாவடியை வேகமாக கடந்து செல்ல முயற்சித்தார் இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. அதை தொடர்ந்து வேன் தீப்பிடித்து எரிந்து, சற்று நேரத்தில் வேன் முற்றிலுமாக எரிந்து நாசமானது. வேனில் குழந்தைகள், பெண்கள் உட்பட 20 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் வேனில் பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 20 அகதிகள் இருந்ததாகவும், அவர்கள் சட்டவிரோதமாக ஆஸ்திரியா நாட்டுக்கு செல்ல முயன்ற போது இந்த விபத்து நேரிட்டதும் தெரியவந்தது. அதே சமயம் அகதிகள் அனைவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.