Movie prime

அதிர்ச்சி!! திருடச்சென்ற இடத்தில் கிணற்றில் விழுந்த திருடன் மரணம்!!

 
death
இன்று பல எதிர்பாராத விபத்துகள் நிகழ்ந்து பல்வேறு சூழல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், திருடபோன இடத்தில் கிணற்றில் விழுந்து திருடன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சரியால் நகரில் திருடன் ஒருவன் நேற்று முன்தினம் இரவு திருடுவதற்கு சென்றுள்ளான்.
well
அப்போது, திருடன் சுவர் ஏறி குதித்து ஒரு வீட்டுக்குள் புகுந்த போது, தரை என்று நினைத்து கிணற்றுக்குள் விழுந்துள்ளான். வீட்டின் உரிமையாளர் நேற்று காலையில் கிணற்றை எட்டி பார்த்த போது, ஒருவரின் உடல் மிதப்பதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
police
தொடர்ந்து, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சுவர் ஏறி குதித்த திருடன் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. அதன் பின்னர், உடலை மீட்ட காவல்துறையினர் அவர் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.