Movie prime

அதிர்ச்சி!! மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!

 
death
தர்மபுரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சூழல்களில் பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்த வன்னம் உள்ளன. இதனால் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
death
எதிர்பாராத சூழலில் ஏற்படும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், 8 ஆம் வகுப்பு மகன் மின் விளக்கை சரி செய்யும் போது மின்சாரம் தாக்கி பலியானதை தொடர்ந்து, மகன் மற்றும் பேரன் இறந்த சோகத்தில் தாத்தாவும் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
bulb
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஓடைக்கரையில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் அத்தை மூவரும் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.